மாசி பெரியண்ண சுவாமி கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி
கும்பாபிஷேகத்திற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விராலிமலை:
விராலிமலை தாலுகா பூமக்கோன்பட்டியில் கட்டப்புளிகாடு மாசி பெரியண்ண சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள அன்னகாமாட்சி அம்மன், மாசி பெரியண்ண சுவாமி, கருப்பசாமி, காத்தவராயன், மதுரைவீரன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நடத்துவது என்று ஊர் பெரியவர்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் வருகிற 16-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்துவது என ஊர் முக்கியஸ்தர்கள் முடிவெடுத்து முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சியானது நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஊர் முக்கியஸ்தர்கள், திருப்பணி குழுவினர், பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.