கால்நடைகளுக்கான மருத்துவ முகாம்

கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2022-03-07 17:51 GMT
பொன்னமராவதி:
பொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரியில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மீனாள் அயோத்தி ராஜா தலைமை தாங்கினார். இதில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமமக்கள் தங்களது கால்நடைகளை முகாமுக்கு அழைத்து வந்து பரிசோதனைகளை மேற்கொண்டனர். இதில் கால்நடை மருத்துவர், ஊராட்சி மன்றத்தின் துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முறையாக பராமரித்து சிறந்த கால்நடைகளுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்