அரூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து விதியை மீறிய 343 பேர் மீது வழக்கு
அரூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து விதியை மீறிய 343 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அரூர்:
தர்மபுரி மாவட்டம் அரூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட மொரப்பூர், அரூர், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, கம்பைநல்லூர், கோட்டப்பட்டி, கடத்தூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது செல்போன் பேசி கொண்டு வாகனம் ஓட்டியது, ஹெல்மெட் அணியாமல் சென்றது, சீட் பெல்ட் அணியாமல் சென்றது, இருசக்கர வாகனத்தில் 3 பேர் சென்றவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். மேலும் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் சென்றது உள்பட போக்குவரத்து விதிமுறையை மீறிய 343 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.