போச்சம்பள்ளி அருகே விஷம் குடித்து வேன் டிரைவர் தற்கொலை
போச்சம்பள்ளி அருகே விஷம் குடித்து வேன் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா அங்கம்பட்டி அருகே உள்ள கெங்கிநாயக்கம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 35). வேன் டிரைவர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் குடும்பத்திலும் பிரச்சினை இருந்தது. இதனால் மனமுடைந்த ஆறுமுகம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.