நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த மாணவிக்கு நிதி உதவி

நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த மாணவிக்கு நிதி உதவியை மதியழகன் எம்எல்ஏ வழங்கினார்

Update: 2022-03-07 17:49 GMT
கிருஷ்ணகிரி:
பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலேரஹள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் பர்கூர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு செய்தார். அங்கு படித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை, ஆசிரியர்கள் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்த அவர் பள்ளியில் கட்டிடங்களை ஆய்வு செய்தார். மேலும் பள்ளிக்கு தேவையான வசதிகள் குறித்து தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஐகொந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்று தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவி டி.கலைக்கு டி.மதியழகன் எம்.எல்.ஏ. மருத்துவம் படிக்க நிதி உதவி வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும் செய்திகள்