பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி வழங்கினார்

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி வழங்கினார்

Update: 2022-03-07 17:48 GMT
கிருஷ்ணகிரி,:
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கான இலக்கிய, விளையாட்டு போட்டிகள் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமீர்பாஷா தலைமை தாங்கினார். இதில் ஓட்ட போட்டியில் 12 பேரும், நீளம் தாண்டுதலில் 12 பேரும், கட்டுரை போட்டியில் 6 பேரும், பேச்சு போட்டியில் 6 பேரும் என மொத்தம் 36 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்