கருவேப்பிலைபாளையம் கிராமத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு

கருவேப்பிலைபாளையம் கிராமத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு;

Update: 2022-03-07 17:30 GMT

அரசூர்

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கருவேப்பிலைபாளையம் கிராமத்தை ஊராட்சியாக அறிவித்த முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு  பாராட்டு விழா கருவேப்பிலைபாளையம் கிராமத்தில் நடைபெற்றது. 
விழாவில் கலந்துகொண்ட தமிழக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் எம்.எல்.ஏ.வும், கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான இரா.குமரகுரு தலைமையில் மீட்புக் குழு இளைஞர்கள், கிராம பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் மேளதாளம் இசையுடன் சிறப்பான வரவேற்பு அளித்து நினைவுபரிசு வழங்கி பாராட்டினர். இதில் கருவேப்பிலைபாளையம், மீட்புக் குழு இளைஞர்கள் கிராம பொதுமக்கள், திருவெண்ணெய்நல்லூர் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஏகாம்பரம், ராமலிங்கம், நகர செயலாளர் காண்டீபன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்