கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து சரிவு

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று 2 பேருக்கு மட்டுமே பாதிப்பு உறுதியானது.

Update: 2022-03-07 17:09 GMT
கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் கொரோனா 3-வது அலை வேகமாக பரவி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்து வந்தது. இதனால் பல்வேறு தளர்வுகள் கொண்டு வரப்பட்டன. பொதுமக்களும் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளனர். கடந்த மாதம் 22-ந்தேதி பாதிப்பு எண்ணிக்கை 10 ஆக இருந்தது. அதன்பிறகு ஒற்றை இலக்க எண்ணிலேயே பாதிப்பு எண்ணிக்கை இருந்தது.

நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், 2 பேருக்கு மட்டுமே பாதிப்பு உறுதியானது. அதுவும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். இதன் மூலம் இதுவரை 74 ஆயிரத்து 230 பேருக்கு பாதிப்பு உறுதியானது. நேற்று முன்தினம் வரை 73 ஆயிரத்து 287 பேர் குணமடைந்த நிலையில், நேற்று 11 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது வரை கொரோனாவுக்கு 893 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்