சாராயம் கடத்திய 2 பேர் கைது

நாகூரில் சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-07 17:09 GMT
நாகூர்:
நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு நாகூர் கிழக்கு கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக  காரைக்காலில் இருந்து நாகையை நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் சென்றனர். அப்போது அவர்கள் போலீசாரை கண்டதும், மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றுள்ளனர். இதை தொடர்ந்து அவர்களை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். 
விசாரணையில் அவர்கள் கீழ்வேளூர் கீழத்தெருவை சேர்ந்த மோகன்தாஸ் மகன் வீரமுருகன் (வயது 19), அதே பகுதியை சேர்ந்த துரை மகன் மணிகண்டன் (23) என்பதும், அவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. 
இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குபதிவு செய்து வீரமுருகன், மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 120 லிட்டர் சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்