அமைச்சர் பற்றி முகநூலில் அவதூறு தொழிலாளி கைது
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பற்றி முகநூலில் அவதூறு கருத்து தெரிவித்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்,
கடலூர் நகர தி.மு.க. செயலாளர் கே.எஸ்.ராஜா நேற்று கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதில், கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், தமிழக வேளாண்மை துறை அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பற்றி, கடலூர் எஸ்.என்.சாவடி டி.எஸ்.ஆர். நகரை சேர்ந்த முரளி கிருஷ்ணன் (வயது 51) என்பவர் முக நூலில் அவதூறாக பதிவிட்டு பரப்பி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதன்பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முரளிகிருஷ்ணனை கைது செய்தனர். முரளிகிருஷ்ணன் கடலூரில் உள்ள பெயிண்ட் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.