கொசுக்களை ஒழிக்க செயல்திட்டம்

கொசுக்களை ஒழிக்க செயல்திட்டம்

Update: 2022-03-07 16:49 GMT

மன்னார்குடி;
மன்னார்குடி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளையும் 5 வார்டுகள் கொண்ட 7 பிரிவுகளாக பிரித்து 1 வாரத்துக்குள் நகரத்தின் அனைத்து பகுதிகளிலும் கொசுக்களை ஒழிக்க எந்திரங்களை கொண்டு புகை மருந்து அடிக்கும் செயல்திட்டத்தை நகராட்சி தலைவர் சோழராஜன்  தொடங்கி வைத்தார். அப்போது அவர் முதல் கட்டமாக 5 வார்டுகளுக்கு புகை மருந்து எந்திரங்களை சுகாதாரபணியாளர்களுக்கு வழங்கினார்.  நிகழ்ச்சியில் நகரசபை துணைத்தலைவர் கைலாசம், நகராட்சி ஆணையர் செண்ணுகிருஷ்ணன் மற்றும் சுகதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், சுவாமிநாதன் மற்றும் நகராட்சி சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 


மேலும் செய்திகள்