நகைக்கடை உரிமையாளர் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்கு
நகைக்கடை உரிமையாளர் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்கு
திண்டிவனம்
திண்டிவனம் மொட்டையன்தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 54). காந்தி சிலை அருகில் நகைக்கடை வைத்துள்ள இவர், வேப்பஞ்சாலை தெருவை சேர்ந்த சுகுமார் என்பவரிடம் ரூ.5 லட்சம் கடன் பெற்றுள்ளார். இதில், ரூ.2 லட்சத்தை திருப்பி கொடுத்துள்ளார். இந்நிலையில், மீதி தொகையை கேட்டு சதீஷ்குமார் நகைக்கடைக்குள் அத்துமீறி நுழைந்து அவரை சுகுமார் மற்றும் அவரது மகன் சத்தியா, தூத்துக்குடியை சேர்ந்த கிஷோர் ஆகியோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில் சுகுமார் உள்பட 3 பேர் மீது திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.