மர்ம காய்ச்சலுக்கு மாணவி பலி

மர்ம காய்ச்சலுக்கு மாணவி பலி;

Update: 2022-03-07 16:21 GMT
தாராபுரம் அருகே சங்கராண்டாம்பாளையத்தை அடுத்த புதுப்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மனைவி செல்வி. இவர்களது  மகள் மோனிஷாவயது 15. இவர் கொளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக மோனிஷா காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து மாணவி மோனிஷாவை பெற்றோர் குளத்துப்பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கான சேர்த்தனர். 
அங்கு ஒரு நாள் மட்டும் காய்ச்சல் குறைந்ததாக பெற்றோர் தெரிவித்தனர். அதன்பின்னர் மீண்டும் காய்ச்சல் அதிகரிக்க தொடங்கியது. இதனால் மாணவிக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டனர்.
சாவு 
அப்போது மாணவிக்கு என்ன காய்ச்சல் என கண்டுபிடிக்க முடியவில்லை என டாக்டர்கள் கூறியதாக பெற்றோர் தெரிவித்தனர். இதனை அறிந்த பெற்றோர் மாணவியை தாராபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மாணவிக்கு, டாக்டர்கள் சிகிச்சை அளித்த போது திடீரென வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த டாக்டர்கள் மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவைக்கு அனுப்பி வைத்தனர்.அப்போது செல்லும் வழியில் மாணவி மோனிஷா இறந்தார். இது குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்ம காய்ச்சலுக்கு மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்