பொள்ளாச்சியில் மின்மயமாக்கப்பட்டுள்ள ரெயில்பாதையை அதிகாரி ஆய்வு

பொள்ளாச்சியில் மின்மயமாக்கப்பட்டுள்ள ரெயில்பாதையை ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் ஆய்வு செய்தார்.

Update: 2022-03-07 16:11 GMT
பொள்ளாச்சி

பாலக்காடு மற்றும் மதுரை கோட்டத்தில் அகலபாதையாக மாற்றப்பட்ட பழனி-பொள்ளாச்சி-பாலக்காடு ரெயில்பாதையில் மின்மயமாக்கல் நடைபெற்று வந்தது. இதன் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, தெற்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் நேற்று மின்மயமாக்கபட்ட ரெயில் பாதையில் ஆய்வு நடத்தினார்.

இதற்காக அவர் காலை 6.30 மணிக்கு மதுரையில் இருந்து சிறப்பு ரெயிலில் 7.40-க்கு திண்டுக்கல் வந்தார். பின்னர் அங்கிருந்து 8.30-க்கு பழனியை அடைந்தார். பழனியில் இருந்து 8.50 மணிக்கு அபய்குமார் ராய் ஆய்வை தொடங்கினார். 

அப்போது, மின்மயமாக்கப்பட்ட வழித்தடத்தில் உள்ள பாலங்கள், தண்டவாளங்கள், மின்மயமாக்கல் பணிகள், கட்டுப்பாட்டு அமைப்புகள் ஆகியவற்றை சிறப்பு ரெயிலில் சென்று ஆய்வு செய்தார்.

இதையடுத்து மதியம் 12.30 மணிக்கு பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பொள்ளாச்சி-பாலக்காடு ரெயில்பாதையை ஆய்வு செய்தார். 

மேலும் செய்திகள்