வைத்தீஸ்வரன்கோவிலில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருட்டு
வைத்தீஸ்வரன்கோவிலில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருடப்பட்டது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சீர்காழி:-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் விளக்கு முக தெருவை சேர்ந்தவர் ராஜதுரை (வயது49). விவசாயி. இவர் நேற்று மதியம் வைத்தீஸ்வரன்கோவில் கீழவீதியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ.1 லட்சம் எடுத்துக்கொண்டு அந்த பணத்தை தனது ஸ்கூட்டரின் இருக்கைக்கு அடியில் வைத்திருந்தார். மேல வீதியில் உள்ள ஒரு டீக்கடை அருகில் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு தனது செல்போனுக்கு ரீசார்ஜ் செய்ய சென்றார். மீண்டும் வந்து பார்த்தபோது ஸ்கூட்டரில் இருந்த ரூ.1 லட்சத்தை காணவில்லை. மர்ம நபர்கள் அதை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ராஜதுரை வைத்தீஸ்வரன்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் காயத்ரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.