மாணவ மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு போட்டிகள் முகத்தில் ஓவியம் வரைந்து அசத்தல்

கோவை அரசு கலைக்கல்லூரியில், கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு போட்டிகள் தொடங்கியது. இதில் முகத்தில் ஓவியம் வரைந்து மாணவ- மாணவிகள் அசத்தினர்.;

Update: 2022-03-07 15:50 GMT
கோவை

கோவை அரசு கலைக்கல்லூரியில், கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு போட்டிகள் தொடங்கியது. இதில் முகத்தில் ஓவியம் வரைந்து மாணவ- மாணவிகள் அசத்தினர்.

திறன் மேம்பாட்டு போட்டிகள்

கோவை அர‌சு கலைக்க‌ல்லூரி சார்பில் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு போட்டிகள் லிட்ரா-2022 என்ற பெயரில் நடத்த முடிவு செய்யப்பட்டன. 

அதன்படி ஆங்கில‌ இல‌க்கிய‌த்தை மைய‌ப்ப‌டுத்தி முகத்தில் ஓவியம் வரைதல், வர்ணம் தீட்டுதல், மீம்ஸ், ர‌ங்கோலி உள்ளிட்ட போட்டிகள்  தொடங்கியது. 
இதை கல்லூரி முதல்வர் கலைச்செல்வி தொடங்கி வைத்தார். 

ஓவியம் போட்டியில் ப‌ல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு ஓவிய‌ங்க‌ள் வரைந்தனர். அத்துடன் முகத்திலும் ஓவியங்கள் வரைந்து அசத்தினர். 

போட்டியின்போது இய‌ற்கை, புலிக‌ள் பாதுகாப்பு, அப்துல்கலாமின் அக்னிச்சிற‌குக‌ள், பீனிக்ஸ் போன்ற ஓவிய‌ங்க‌ள் வ‌ரைந்து அச‌த்தின‌ர். 

போட்டியின் நடுவர்களாக அழகுக்கலை நிபுணர் தீபிகா, பொருளியல் துறை தலைவர் சோபா, இயற்பியல் பேராசிரியர் உமாதேவி ஆகியோர் கலந்து கொண்டு 3 வெற்றியாளர்கள் தேர்வு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆங்கில பேராசிரியர் புஷ்பலதா செய்து இருந்தார்.

சான்றிதழ்கள்

இதில் கவுதம்குமார் முதல் பரிசையும், சரோன், அருள், எட்வர்டு ஆகியோர் 2-வது இடத்தையும், வைஷ்ணவி, ஜெசிகா ரோஸ் ஆகியோர் 3-வது இடத்தையும் பிடித்தனர். 

அவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த போட்டி வருகிற 11-ந் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. 

மேலும் செய்திகள்