பாலாற்று மேம்பால பணி: கிராமப்புற சாலைகளில் திருப்பி விடப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

பாலாற்று மேம்பால பணிகளால் கிராமப்புற சாலைகளில் வாகனங்கள் திருப்பி விடப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Update: 2022-03-07 14:30 GMT
பாலாற்று மேம்பால சீரமைப்பு பணி

சென்னையையும் தென் மாவட்டங்களையும் இணைக்க கூடிய முக்கிய சாலையாக செங்கல்பட்டு பாலாற்று மேம்பால சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை இருந்து வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக வந்து செல்கின்றன.

இந்த நிலையில் கடந்த ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக செங்கல்பட்டு அருகே உள்ள பாலாற்று மேம்பாலத்தில் உள்ள சாலைகள் கடுமையான பாதிப்புக்குள்ளானது. பாலாற்று மேம்பாலத்தை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

போக்குவரத்து நெரிசல்

இதனிடையே திருச்சி மார்க்கமாக உள்ள பழையபாலம் மட்டும் தற்போது சீரமைக்கப்பட்ட நிலையில் சென்னை மார்க்கத்தில் உள்ள பாலப்பணிகள் நடந்து வருகின்றன. இதனால் வாகனங்கள் கிராமப்புற சாலைகள் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்பி நேற்று சென்னை வந்ததால் மாற்றுப்பாதையான மெய்யூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் அதிகப்படியான வாகனங்களின் வருகையால் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் செய்திகள்