டாஸ்மாக் கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

டாஸ்மாக் கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

Update: 2022-03-07 13:40 GMT
ஊட்டி

ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட புதுமந்து பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மதுபிரியர்கள் மதுபானங்களை வாங்கி அருகே உள்ள சாலையோரம் மற்றும் வனப்பகுதியில் அமர்ந்து மது அருந்தி வருகின்றனர். பின்னர் காலி மதுபாட்டில்கள், கப்புகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதியில் வீசி விட்டு செல்கின்றனர். இதனால் எங்கு பார்த்தாலும் மதுபான பாட்டில்கள், குப்பைகள் காணப்படுகிறது. இதுகுறித்து ஊட்டி நகராட்சிக்கு புகார் வந்தது. அதன் பேரில் சுகாதார அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். 

ஆய்வில் டாஸ்மாக் கடையில் மதுபானங்களை வாங்கி வந்து சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் பொருட்கள், மதுபான பாட்டில்களை வீசி செல்வது தெரியவந்தது. இதனால் அந்த டாஸ்மாக் கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. அந்த வனப்பகுதியில் குரங்கு, காட்டெருமை, கடமான் போன்ற வனவிலங்குகள் காணப்படுகிறது. காலி மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்களால் வனவிலங்குகளுக்கு தீங்கு ஏற்படும் அபாயம் உள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்