ஊட்டி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

ஊட்டி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

Update: 2022-03-07 13:39 GMT
ஊட்டி

ஊட்டி அருகே சின்ன குன்னூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் இன்று திருவிழா தொடங்குவதாக இருந்தது. ஆனால் ஹப்பன்கம்பை ஊர் மக்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக திருவிழாவில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில், இரு தரப்பினரும் அமைதியான முறையில் கோவில் திருவிழா நடத்த வேண்டும், இல்லையென்றால் திருவிழா நடத்தக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை மீறி ஒரு தரப்பினர் மட்டும் திருவிழாவை நடத்துவதாக கூறி நேற்று நள்ளிரவில் மற்றொரு தரப்பினர் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

மேலும் முகாம் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து திருவிழாவை தடுத்து நிறுத்த வேண்டும், சாதி பெயரை கூறி இழிவுபடுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுக்கூறி தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து இன்று ஊட்டி கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில், கலெக்டர் அம்ரித் தலைமையில் இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடந்தது. சென்னை ஐகோர்ட்டில் வழக்கு உள்ளதால் திருவிழா நடத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. இதை ஏற்று இரு தரப்பினரும் உறுதியளித்தனர். இதில் ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி, ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு ஞானரவி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்