ஆசிரியர்களுக்கு கையேடு வினியோகம்

ஆசிரியர்களுக்கு கையேடு வினியோகம்

Update: 2022-03-07 12:12 GMT
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மாணவர்களிடம் கற்றல் இழப்பைத் தடுக்கவும், படித்தல் திறனை மேம்படுத்தவும், திருமூர்த்தி நகரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. பயிற்சி நிறுவன முன்னாள் முதல்வர்  தலைமையில் 30 நாட்களில் தமிழ் படித்தல் கையேடு, ரீட் தமிழ் செயலி ஆகியவை வடிவமைக்கப்பட்டு ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
தற்போது பள்ளிகள் வழக்கம்போல் செயல்பட்டு வரும் நிலையில் மாணவர்களது படித்தல் திறன் குறித்து, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் வீ. சங்கர் தலைமையில், முன்னாள் முதல்வர் பொள்ளாச்சி நசன், பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் ம.சரவணக்குமார் ஆகியோர் திருமூர்த்திமலை அரசு உண்டு உறைவிடப்பள்ளி மற்றும் திருமூர்த்திநகர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் படிக்கும் மாணவர்களது படித்தல் திறனைஆய்வு செய்தனர். அப்போது படித்தல் திறனை மேம்படுத்தும் கையேடுகளை ஆசிரியர்களுக்கு வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியின்போது பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர்கள் பாபி இந்திரா, சுப்பிரமணி, நூலகர் ராமகிருஷ்ணன், புள்ளியியல் அலுவலர் லிங்கசாமி, பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் உடனிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளைபயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் ம.சரவணகுமார் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்