மறியல் செய்ய முயன்ற பொதுமக்களுடன்

மறியல் செய்ய முயன்ற பொதுமக்களுடன்

Update: 2022-03-07 12:10 GMT
குன்னத்தூரில் கோபி ரோடு, செங்கப்பள்ளி ரோடு, பெருந்துறை ரோடு, மலையப்பாளையம் ரோடு ஆகிய பகுதிகளில் கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு குழாய் பாதிக்கப்பட்டு மாதக்கணக்கில் ஆகியும் ரோடு போடாததால் இந்த பகுதியில் கடை வைத்திருக்கும் உரிமையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். மேலும் லாரி பஸ் போன்ற கனரக வாகனங்கள் சென்றால் ஏற்படும் புழுதியில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் பெரும் சிரமப்பட்டு வருகிறார்கள். உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின்னும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருந்து வந்தனர். உடனே பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பேரூராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் மறியல் செய்ய முயன்ற போது நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் சரவணன், இளநிலை பொறியாளர் சாமிநாதன், குன்னத்தூர் வருவாய் ஆய்வாளர் ரியானா, குன்னத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பிகா, பேரூராட்சி தலைவர் கொமாரசாமி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது அதிகாரிகள் உடனடியாக ரோடு போட்டு தருவதாக உறுதி அளித்ததால் சாலை மறியலை பொதுமக்கள் கைவிட்டனர்.

மேலும் செய்திகள்