‘லிப்டு’க்காக அமைக்கப்பட்ட பள்ளத்தில் விழுந்து தொழிலாளி பலி

லிப்டுக்காக அமைக்கப்பட்ட பள்ளத்தில் விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.;

Update: 2022-03-07 11:02 GMT
திருமுல்லைவாயல் அடுத்த அயப்பாக்கம் காயத்ரி நகர் ராமசாமி தெருவைச் சேர்ந்தவர் கோட்டீஸ்வரன் (வயது 40). கட்டிடத்தொழிலாளியான இவர், நேற்று காலை திருமுல்லைவாயல் அடுத்த காட்டூர் ஐஸ்வர்யம் நகரில் தனியாருக்கு சொந்தமான கம்பெனியில் கட்டிட வேலை முடிந்து ஜன்னல்களுக்கு கிரில் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

அப்போது 2 மாடிகள் கொண்ட அந்த கட்டிடத்தின் 2-வது மாடியில் செல்போனில் பேசியபடியே நடந்து சென்ற கோட்டீஸ்வரன், சுமார் 30 அடி உயரத்தில் இருந்து ‘லிப்ட்டுக்காக’ அமைக்கப்பட்டு இருந்த பள்ளத்தில் தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த கோட்டீஸ்வரன் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பலியான கோட்டீஸ்வரனுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

மேலும் செய்திகள்