துமகூரு, பெங்களூரு, பெலகாவியில் கஞ்சா விற்ற 7 பேர் கைது

துமகூரு, பெலகாவி, பெங்களூருவில் கஞ்சா விற்றதாக 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2022-03-06 21:48 GMT
பெங்களூரு:

13 கிலோ கஞ்சா பறிமுதல்

  துமகூரு மாவட்டம் குனிகல் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பஸ் குனிகல் பஸ் நிலையம் அருகே சந்தேகப்படும்படியாக 4 பேர் அங்கும், இங்குமாக சுற்றித்திரிந்தனர். அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் 4 பேரையும் பிடித்து விசாரித்தனர். மேலும் அவர்கள் கைகளில் வைத்திருந்த பைகளை வாங்கி சோதனை செய்தபோது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது.

  அவர்கள் 4 பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனால் அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான 13 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுபோல பெங்களூரு ஜே.ஜே.நகர் போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின்பேரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 2 பேரை கைது செய்து விசாரித்தனர்.

வழக்குப்பதிவு

  விசாரணையில் அவர்களது பெயர்கள் மன்சூர், சோயப் என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் சேர்ந்து கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 32 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

  பெலகாவியில் கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்களை குறிவைத்து அதிக விலைக்கு கஞ்சா விற்பனை செய்ததாக ராகுல் என்பவரை பெலகாவி சி.இ.என். போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 7 பேர் மீதும் குனிகல், ஜே.ஜே.நகர், சி.இ.என். போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்