பாலமேடு பகுதியில் நாளை மின்தடை
பாலமேடு பகுதியில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை மின்தடை வினியோகிக்கப்படுகிறது.
வாடிப்பட்டி,
சமயநல்லூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட மாணிக்கம்பட்டி துணை மின் நிலையம் மற்றும் சோழவந்தான் துணை மின் நிலையத்தில் வாட்டர் ஒர்க் பீடரில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே மாணிக்கம்பட்டி, உசிலம்பட்டி, மறவர்பட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி, தெத்தூர், டி.மேட்டுப்பட்டி, சின்ன பாலமேடு, கோணப்பட்டி, சாத்தையாறு அணை, எர்ரம்பட்டி, தேவசேரி, பொந்துகம்பட்டி, சேந்தமங்கலம், முடுவார்பட்டி, பாலமேடு நகர்ப் பகுதிகள், ஆதனூர் மற்றும் அச்சம்பத்து வாட்டர் பம்பிங் ஸ்டேஷன், இரும்பாடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.