பா.ஜனதா அரசால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது - சித்தராமையா குற்றச்சாட்டு

பா.ஜனதா அரசால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது என்று எதிர்கட்சி தலைவர் சித்தராமையா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-06 20:43 GMT
மைசூரு:

சித்தராமையா பேட்டி

  முன்னாள் முதல்-மந்திரியும், எதிர்கட்சி தலைவருமான சித்தராமையா ைமசூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

  நாட்டில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல்-டீசல், கியாஸ் சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் வாழ்க்கை நடத்த முடியாமல் அவதிப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

வேலையில்லா திண்டாட்டம்

  கர்நாடகத்தை ஆளும் பா.ஜனதா அரசு மக்களின் ஆசீர்வாதத்தால் ஆட்சிக்கு வரவில்லை. ஆபரேஷன் தாமரை திட்டத்தை நடத்தி மற்ற கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை விலை கொடுத்து வாங்கி ஆட்சி அமைத்துள்ளனர். ஆட்சியை பிடித்தாலும் மக்கள் பணியில் தோல்வியுற்றுள்ளனர்.

  அரசுடைமைகளை தனியார் கம்பெனிகளுக்கு விற்பனை செய்து வருகிறது. இதனால் நாட்டில் வேலை இல்லாத திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. பட்டதாரிகள் இளைஞர்கள் வேலை இல்லாமல் வருமானம் இன்றி கஷ்டப்படுகின்றனர்.

  பா.ஜனதா அரசால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது. மேலும் நாட்டில் எங்கு பார்த்தாலும் ஊழல், முறைகேடுகள், சட்டம்-ஒழுங்கு சீரற்று மதம் மற்றும் சாதி கலவரங்கள் நடக்கிறது. எனவே, பொதுமக்கள் வரும் தேர்தலில் நல்ல கட்சியை ஆட்சி அமைக்க செய்ய வேண்டும்.
  இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்