குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் நேரடியாக மனு அளிக்கலாம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் நேரடியாக மனு அளிக்கலாம்.

Update: 2022-03-06 20:38 GMT
அரியலூர்:
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் நடைபெற்று வந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படாமல், பொதுமக்கள் மனுக்களை செலுத்துவதற்காக பெட்டி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால் அரசு உத்தரவின்படி அரியலூர் மாவட்டத்தில் இன்று முதல் வாரந்தோறும் திங்கட்கிழமையன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலக தரை தளத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. எனவே அரசு வழிகாட்டுதலின்படி முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை நேரடியாக அளிக்கலாம். இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்