அரிவாளுடன் திரிந்தவர் கைது

சிவகாசி அருகே அரிவாளுடன் திரிந்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-06 20:36 GMT
சிவகாசி, 
திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் காசிராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பஜார் பகுதியில் கையில் அரிவாளுடன் ஆலாவூரணியை சேர்ந்த மாரிசெல்வம் (வயது 22) என்பவர் நின்று கொண்டிருந்தார். போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்ற அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த அரிவாளை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்