மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 பேர் படுகாயம்

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-03-06 20:35 GMT
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் வடவார் அருகே உள்ள கண்டியங்கொல்லை தெற்கு தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 46). இவர், அதே பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் என்பவரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு, தனது ஊரில் இருந்து வடவார் தலைப்பு வந்தார். அப்போது அதே சாலையில் வந்த டிப்பர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து சிவகுமாரின் தம்பி செல்வராசு கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி டிரைவர் கடலூர் மாவட்டம் நெய்வேலி ஆட்டோகேட்டை சேர்ந்த ராஜா (வயது 33) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்