சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை - கோலார் கோர்ட்டு தீர்ப்பு

சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோலார் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

Update: 2022-03-06 20:35 GMT
கோலார் தங்கவயல்:

சிறுமி பலாத்காரம்

  கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா லக்கூரில் சிறுமி ஒருவள் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஜுன் 25-ந்தேதி சிறுமி வெளியே நடந்து சென்றுள்ளார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த வாலிபரான பர்கத் உல்லா கான், ஆந்திராவை சேர்ந்த தனது நண்பர் சுரேஷ் உதவியுடன் சிறுமியை காரில் கடத்தி ஆந்திராவுக்கு அழைத்து சென்றுள்ளார்.

  அங்கு சுரேசின் வீட்டில் சிறுமியை, பர்கத் உல்லா கான் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மாலூர் போலீசார் சிறுமியை மீட்டு பலாத்காரம் செய்த பர்கத் உல்லா கானை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சிறை தண்டனை

  இந்த வழக்கு விசாரணை கோலார் கோர்ட்டில் இருந்தது. இந்த நிலையில் நேற்று நீதிபதி தேவமானே வழக்கு விசாரணையை நடத்தி முடித்து தீர்ப்பு கூறினார். அதில், சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த பர்கத் உல்லாகானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்