கள் விற்ற 2 பேர் கைது
வாடிப்பட்டி அருகே கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாடிப்பட்டி,
வாடிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பகுதியில் பெரியாறு பாசன கால்வாய் கரையில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த தென்காசியை சேர்ந்த கண்ணன் (வயது 37), பெரியசாமி (65) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் முட்புதரில் மறைத்து வைத்திருந்த 3 குடங்களில் கள் விற்றது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 45 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக கண்ணன், பெரியசாமி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.