மாற்று வாக்காளர் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம்

மாற்று வாக்காளர் அடையாள அட்டை பெற வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம்.

Update: 2022-03-06 20:30 GMT
அரியலூர்:
தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் தமிழக அரசு முதன்மைச் செயலாளர் அறிவுறுத்தலின்படி, வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே வாக்காளராக இடம் பெற்று தொலைந்து போன அல்லது சேதமடைந்த புகைப்படத்துடன் கூடிய மின்னணு வாக்காளர் அடையாள அட்டைக்கு மாற்றாக புதிய வாக்காளர் அடையாள அட்டையை பெறுவதற்கு ஏற்ப, வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு வாக்காளர்கள் தங்கள் எல்லைக்கு உட்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரி அல்லது வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அல்லது உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அல்லது தாசில்தார் அலுவலகத்தில் அமைந்துள்ள தேர்தல் பிரிவில், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவம் “001”-ஐ பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து அந்த அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். அல்லது http://www.nvsp.in என்ற இணையதள முகவரியின் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்கப்பட்ட மனுக்கள், உரிய விசாரணை அலுவலரால் தேர்தல் விதிகளுக்கு உட்பட்டு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, விண்ணப்பமானது ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்பு, விண்ணப்ப படிவத்தில் அளித்துள்ள விண்ணப்பதாரரின் கைபேசிக்கு குறியீட்டு எண்ணானது (கியூஆர்-கோடு) அனுப்பப்படும், அவ்வாறு குறியீட்டு எண் கிடைக்கப்பெற்ற பின்பு, அக்குறியீட்டு எண்ணை அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவில் இயங்கும் மாவட்ட தொடர்பு மையம் அல்லது வாக்காளர் உதவி மையத்தில் காண்பித்து தானியங்கி அச்சிடும் எந்திரத்தின் மூலமாக உடனடியாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையினை பெற்று பயன்பெறலாம். இந்த தகவலை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்