பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

வெம்பக்கோட்டை பகுதியில் பருத்தி சாகுபடியை விவசாயிகள் ஆர்வத்துடன் சாகுபடி செய்து வருகின்றனர்.

Update: 2022-03-06 20:23 GMT
தாயில்பட்டி, 
வெம்பக்கோட்டை பகுதியில் பருத்தி சாகுபடியை விவசாயிகள் ஆர்வத்துடன் சாகுபடி செய்து வருகின்றனர். 
பருத்தி சாகுபடி 
வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிணறுகள், கண்மாய்கள், ஊருணிகள் ஆகியவற்றில் தண்ணீர் இருப்பதால் விவசாயிகள் 8 ஆண்டுகளுக்கு பிறகு பருத்தி சாகுபடியை மேற்கொண்டுள்ளனர். 
வெம்பக்கோட்டை, வல்லம்பட்டி, சங்கரபாண்டியபுரம், ஏழாயிரம்பண்ணை, கீழச்செல்லையாபுரம், ஊத்துப்பட்டி, கங்கரகோட்டை, கோவில் செல்லையாபுரம், மார்க்க நாதபுரம், மேலசத்திரம், ரெட்டியாபட்டி, நதிகுடி, செவல்பட்டி  மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்  300 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். 
விலை உயர்வு 
இதுகுறித்து  கீழ செல்லையாபுரம் விவசாயி சுந்தரமூர்த்தி கூறியதாவது:- 
நீர் நிலைகளில் போதிய அளவு தண்ணீர் இருப்பதாலும், குளிர்ச்சியான தட்பவெப்பநிலை இருப்பதாலும் பருத்தியை சாகுபடி செய்துள்ளோம். 
கடந்த முறை அறுவடையின் போது காய்ந்த பருத்தி விலை குவிண்டாலுக்கு ரூ. 9,500 விலை கிடைத்தது. மேலும் பருத்திக்கு அதிக அளவு ஆர்டர் இருப்பதால் குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்திற்கும் மேல் உயர வாய்ப்பு இருப்பதால் 8 ஆண்டுக்கு பிறகு மீண்டும் பருத்தி சாகுபடி செய்துள்ளோம். 
இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்