ஆந்திராவில் இருந்து 2,600 டன் அரிசி மூட்டைகள் திருச்சி வந்தன
2,600 டன் அரிசி மூட்டைகள் சரக்கு ரெயில் மூலம் திருச்சி வந்தன
திருச்சி
திருச்சி குட்ஷெட் யார்டுக்கு வெளிமாநிலங்களில் இருந்து அவ்வப்போது அரிசி, கோதுமை, உரம் போன்றவை சரக்கு ரெயிலில் கொண்டு வரப்படும். அந்தவகையில் ஆந்திராவில் இருந்து 2,600 டன் அரிசி மூட்டைகள் சரக்கு ரெயிலில் திருச்சி குட்ஷெட் யார்டுக்கு நேற்று வந்தது. மொத்தம் 41 வேன்களில் வந்த அரிசி மூட்டைகளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் ரெயிலில் இருந்து இறக்கி லாரிகளில் ஏற்றி திருச்சி கே.கே.நகரிலுள்ள அரசு சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து பொது வினியோக திட்டத்திற்காக பல்வேறு மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.