பிளஸ்-1 மாணவி விஷம் குடித்து தற்கொலை

பாளையங்கோட்டை அருகே பிளஸ்-1 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-06 20:11 GMT
நெல்லை:

பாளையங்கோட்டை அருகே மேல புத்தநேரி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகள் சிவரஞ்சனி (வயது 17). இவர் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக சிவரஞ்சினியின் பெற்றோர் அடிக்கடி தங்களுக்கு இடையே தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிவரஞ்சனி சம்பவத்தன்று தனது வீட்டில் திடீரென்று விஷம் குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். உடனே அவரை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சிவரஞ்சனி நேற்று பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்