விருதுநகர்-மானாமதுரை அகல ரெயில் பாதையில் 100 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம்

விருதுநகர்-மானாமதுரை அகல ெரயில்பாதை மின்மயமாக்கப்பட்டதை தொடர்ந்து பெங்களூரு ெரயில்வே தலைமை பாதுகாப்பு கமிஷனர் அபய்குமார்ராய் இப்பாதையில் ஆய்வு மேற்கொண்டதோடு சோதனை ஓட்டமும் நடத்தினர்.;

Update: 2022-03-06 20:00 GMT
விருதுநகர், 
விருதுநகர்-மானாமதுரை அகல ெரயில்பாதை மின்மயமாக்கப்பட்டதை தொடர்ந்து பெங்களூரு ெரயில்வே தலைமை பாதுகாப்பு கமிஷனர் அபய்குமார்ராய் இப்பாதையில் ஆய்வு மேற்கொண்டதோடு சோதனை ஓட்டமும் நடத்தினர்.
அகல ெரயில் பாதை 
விருதுநகர்- மானாமதுரை இடையே ெரயில்பாதை காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது தொடங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த ெரயில் பாதையை அகல ெரயில் பாதையாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாளாக இருந்து வந்தது. இந்த நிலையில் ஐக்கிய முற்போக்குக்கூட்டணி ஆட்சி காலத்தில் ரூ.270 கோடி மதிப்பீட்டில் 65 கி.மீ. தூர ெரயில்பாதை அகல ெரயில் பாதையாக்கப்பட்டு கடந்த 2014-ம் ஆண்டு விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர் ஏற்பாட்டின் பேரில் அப்போதைய மத்திய இணை மந்திரி கே.சி. வேணுகோபால் காமராஜர் பிறந்த தினத்தில் இந்த ெரயில் பாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
 ஆனாலும் இந்த ெரயில் பாதையில் எதிர்பார்த்த அளவிற்கு அதிக எண்ணிக்கையில் ெரயில்கள் இயக்கப்படாத நிலை இன்னும் நீடிக்கிறது.
 மின்மயமாக்கல் 
இதனை தொடர்ந்து இந்த ெரயில்பாதையினை மின் மயமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வந்த நிலையில் அதனை நிறைவேற்றும் வகையில் இந்த ெரயில்பாதை மின் மயமாக்கப்பட்டுள்ளது.
இப்பணி நிறைவடைந்த நிலையில் இதனை ஆய்வு செய்ய மதுரை கோட்டம் ஏற்பாடு செய்தது. இதையடுத்து நேற்று காலை 10.45 மணி அளவில் ெரயில்வே தலைமை பாதுகாப்பு கமிஷனர் அபய்குமார் ராய் மின்மயமாக்கப்பட்ட விருதுநகர்-மானாமதுரை அகல ெரயில் பாதையில் ஆய்வு மேற்கொண்டார்.
சோதனை ஓட்டம் 
விருதுநகர்-மானாமதுரை செல்லும் வழியில் ஆங்காங்கே ெரயிலை நிறுத்தி பாலங்கள் மற்றும் ெரயில் பாதை ஆகியவற்றை ஆய்வு செய்தார். மதியம் 1.30 மணி அளவில் அவர் மானாமதுரை சென்றடைந்தார்.
இதை தொடர்ந்து மாலை 4 மணி அளவில் மானாமதுரையிலிருந்து விருதுநகருக்கு சோதனை ஓட்டம் மேற்கொண்டார். மின்சார ெரயில் என்ஜின் இணைக்கப்பட்ட ஏ.சி. ெரயில் பெட்டியில் அவர் சோதனை மேற்கொண்டார். 100 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. தலைமை பாதுகாப்பு கமிஷனருடன் மதுரை கோட்ட மேலாளர் அனந்த பத்மநாபன், என்ஜினீயர் ரதிப்பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் வந்தனர்.
 இந்த ெரயில் பாதையில் மின்சார ெரயில் போக்குவரத்திற்கு ெரயில்வே பாதுகாப்பு கமிஷனர் அபய்குமார் ராய் தகுதிசான்று அளித்த பின்பு இந்த ெரயில் பாதையில் மின்சார ெரயில் போக்குவரத்து தொடங்கும். 

மேலும் செய்திகள்