பெண்ணிடம் 2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
பெண்ணிடம் 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பேரை போலீஸ் தேடுகிறது.
களியக்காவிளை:
பெண்ணிடம் 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு
மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பேரை போலீஸ் தேடுகிறது.
பளுகல் அருகே உள்ள தேவி கோடு கானத்து கோணம் பகுதியை சேர்ந்தவர் துளசி (வயது 67). இவர் வீட்டின் அருகில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் கடைக்கு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து இருந்தவர் கடைக்கு சென்று குடிக்க தண்ணீர் கேட்டார். அதைத்தொடர்ந்து துளசி தண்ணீர் எடுக்க திரும்பிய போது, அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை வாலிபர் பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறினார். உடனே அந்த பெண் திருடன்... திருடன்... என்று கூச்சல் போட்டார். உடனே அவர்கள் கேரள மாநிலம் பனச்சமூடு சாலையில் மோட்டார் சைக்கிளை மின்னல் வேகத்தில் ஓட்டி சென்றனர். இதுகுறித்து பளுகல் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பேரையும் தேடி வருகிறார்கள்.
பெண்ணிடம் 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு
மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பேரை போலீஸ் தேடுகிறது.