அறந்தாங்கியில் வடமாடு மஞ்சுவிரட்டு

அறந்தாங்கியில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

Update: 2022-03-06 18:50 GMT
அறந்தாங்கி:
அறந்தாங்கி களப்பகாடு ஆலமரத்து முனீஸ்வரர் கோவில் சார்பில் நேற்று வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் கோவில் காளை உள்பட மொத்தம் 13 காளைகள் கலந்து கொண்டன. மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு காளைகளை அடக்கினர். இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. 7 வீரர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. மஞ்சுவிரட்டை சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமானவர்கள் கண்டு களித்தனர். 

மேலும் செய்திகள்