குளத்தில் ஆண் பிணம்

சோளிங்கரில் குளத்தில் கிடந்த ஆண் பிணத்தை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-03-06 18:30 GMT
சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர்-அரக்கோணம் நெடுஞ்சாலையில் உள்ள அப்பங்காரன் குளக்கரையில் காலை, மாலை நேரத்தில் பொதுமக்கள் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். 

நேற்று காலை வழக்கமாக மக்கள் நடைப்பயிற்சியில் ஈடுபட்டபோது, குளத்தில் ஆண் பிணம் கிடந்ததைப் பார்த்து சோளிங்கர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குளத்தில் கிடந்த ஆண் பிணத்தை மீட்டனர். அவருக்கு 45 வயது இருக்கும். பிணமாக கிடந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் ெதரியவில்லை. 

உடலை பிரேதப் பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்தவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்து பிணத்தை குளத்தில் வீசி சென்றார்களா? என்பது குறித்து சோளிங்கர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்