பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை
முகநூலில் காதலித்து பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.;
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த புதூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மதிக்கத்தக்க மாணவி அங்குள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர், 3-ந்தேதி பள்ளிக்கு சென்றார். ஆனால் மாலை வீடு திரும்பவில்லை.
அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் காணவில்லை. இதுகுறித்து வாணியம்பாடி டவுன் போலீசில் பெற்றோர் புகார் செய்தனர். போலீசார், மாணவியை தேடி வந்தனர்.
மாதனுர் பகுதியைச் சேர்ந்த காலணி தொழிற்சாலை ஊழியர் ருத்ரகுமார் (வயது 23) மாணவியை முகநூல் மூலம் காதலித்ததும், ஆசை வார்த்தைகளை கூறி கடத்தி சென்றதும் தெரிய வந்தது.
ஆம்பூரை அடுத்த வெங்கடசமுத்திரம் கிராமத்தில் தங்கியிருந்த மாணவி, ருத்ரகுமாரை போலீசார் பிடித்து வந்து விசாரித்தனர்.
மாணவியை முக நூலில் நட்பாக பழகி காதலித்து, ஆசை வார்த்தைகளை கூறி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார், மாணவியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ருத்ரகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.