தனியார் தொழிற்சாலை பஸ் மோதி போலீஸ் ஏட்டு பலி

அரக்கோணம் அருகே தனியார் தொழிற்சாலை பஸ் மோதி போலீஸ் ஏட்டு பலியானார்.

Update: 2022-03-06 18:29 GMT
அரக்கோணம்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஜோதிநகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 47). இவரின் மனைவி சுஜாதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 

செந்தில்குமார் திருத்தணி போக்குவரத்துப் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு புறப்பட்டார். 

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலை பஸ் திருத்தணி பகுதியில் பணியாளர்களை ஏற்றி கொண்டு வந்தது.

திருத்தணி சாலையில் ஜோதிநகர் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் செந்தில்குமார் சென்றபோது அவரது மோட்டார்சைக்கிள் மீது தனியார் தொழிற்சாலை பஸ் நேருக்கு நேர் மோதியது. 

அதில் பலத்த காயம் அடைந்த ஏட்டு செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் டவுன் போலீசார் விரைந்து வந்து, அவரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தனியார் தொழிற்சாலை பஸ்சை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார். 

மேலும் செய்திகள்