மும்பைவாசிகளுக்கு இரைச்சல் இல்லாத ஞாயிற்றுக்கிழமையை கொடுங்கள் கட்டுமான துறையினருக்கு போலீஸ் கமிஷனர் வேண்டுகோள்

மும்பைவாசிகளுக்கு இரைச்சல் இல்லாத ஞாயிற்றுக்கிழமையை கொடுங்கள் என்று கட்டுமான அதிவர்களுக்கு மும்பை கமிஷனா வேண்டுகோள் விடுத்துள்ளார்

Update: 2022-03-06 18:16 GMT
கோப்பு படம்
மும்பை, 
தலைநகர் மும்பையில் நாளுக்கு, நாள் ஒலி மாசு அதிகரித்து வருகிறது. இதற்கு வாகனங்கள் மட்டுமின்றி கட்டுமான நிறுவனமும் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இந்தநிலையில் மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே நேற்று முகநூல் பக்கம் மூலம் பொதுமக்களிடம் நேரடியாக உரையாற்றினார். அப்போது அவர் கூறியவதாவது:-
கட்டுமான அதிபர்களும் ஒப்பந்ததாரர்களும் எனது பேச்சை கேட்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.  கட்டுமான துறையை சேர்ந்தவர்களும் இந்த மும்பையின் குடிமக்கள், யாராவது நீங்கள் குடும்பத்துடன் பேசும்போது அதற்கிடையே சுத்தியலால் அடித்து தொந்தரவு செய்தால் அதை நீக்கள் விரும்ப மாட்டீர்கள். 
கட்டுமான நடவடிக்கைகள் முக்கியமானவை, ஆனால் அதே நேரத்தில் மும்பை குடிமக்களுக்கு குறைந்தபட்சம் இரைச்சில் இல்லாத ஞாயிற்றுக்கிழமை அல்லது சத்தமில்லாத இரவை கொடுக்கவேண்டும். கட்டுமான துறையினர் ஒலி மாசை கட்டுப்படுத்த வகுக்கப்பட்ட விதிமுறைகளை, நேர விதிமுறைகளுடன் பின்பற்ற வேண்டும். அதை மீறுவதன் மூலமாக போலீஸ் நடவடிக்கைக்கு ஆளாகும் நிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். 
அதுமட்டும் இன்றி வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு மும்பை நகரில் இருக்கும் சொத்துகள் சமூக விரோதிகளால் அபகரிக்கப்படுவதாக எங்களுக்கு புகார்கள் வருகிறது. இதுபோன்ற சம்பவங்களை பொறுத்துக்கொள்ள முடியாது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 
அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள், ஹெல்மட் அணியால் வாகனம் ஓட்டுவர்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் மட்டும் இன்றி வழக்குப்பதிவும் செய்யப்படும். 
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்