வீட்டிற்குள் புகுந்த பாம்பு

வீட்டிற்குள் புகுந்த பாம்பு

Update: 2022-03-06 18:04 GMT
திருப்பத்தூர், 
திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி சன்னதி தெரு பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். அவரது வீட்டில் நேற்று மாலை 8 அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று புகுந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து திருப்பத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சடையாண்டி தலைமையிலான குழுவினர் விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் வீட்டிற்குள் இருந்த பாம்பை நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை திருப்பத்தூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்