அரசு கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
விழுப்புரம் அரசு கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்தித்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியில் கடந்த 1982-84-ம் ஆண்டுகளில் ஒன்றாக படித்த மாணவர்கள் தற்போது தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளனர். இவர்கள் 40 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு நிகழ்ச்சி கோலியனூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராமையன் தலைமை தாங்கினார். கோதண்டராமன், தங்கராசு, விஜயன், செல்வராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் முன்னாள் மாணவர்கள் 70 பேர் கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் உரையாடி தங்களது நட்பை பகிர்ந்து கொண்டனர்.
மேலும் இவர்கள், தாங்கள் கடந்து வந்த கடினமான பாதைகளை நினைவுகூர்ந்து தங்களுக்குள் உரையாடிக்கொண்டதோடு இந்நிகழ்வின் மூலம், கிராமப்புற ஏழை மாணவர்களை கண்டறிந்து அவர்கள் பயன்பெறும் வகையில் பயிற்சி மையம் மற்றும் படிப்பை தொடர முடியாத ஏழை மாணவர்களுக்கு உதவி செய்வது என முடிவு செய்தனர். நிகழ்ச்சியை முன்னாள் தலைமை ஆசிரியர் ராஜாராம், முன்னாள் வருவாய் ஆய்வாளர் சங்கர் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். முடிவில் ஹரிகிருஷ்ணன் நன்றி கூறினார்.