ஆந்திராவுக்கு 1 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்றவர் கைது

ஆந்திராவுக்கு 1 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-03-06 18:00 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு மற்றும் போலீசார், தபால்மேடு சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது தபால்மேடு பஸ் நிறுத்தம் அருகில் ரேஷன் அரிசியுடன் நின்றவரை பிடித்து விசாரித்தனர். அவர் ஆந்திர மாநிலம், சித்தூர் அடுத்த சென்னபோகுபள்ளி பகுதியை சேர்ந்த நாகராஜன் (வயது 38) என்பதும், ரேஷன் அரிசி வாங்கி ஆந்திராவில் அதிக விலைக்கு விற்க கடத்த முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 22 மூட்டைகளில்  கடத்த வைத்திருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்