கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவிகள் கடத்தல் வாலிபர்கள் மீது புகார்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவிகள் கடத்தல் தொடர்பாக வாலிபர்கள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.

Update: 2022-03-06 18:00 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர் 19 வயது பெண். இவர் கல்லூரி ஒன்றில் இளநிலை 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், துறிஞ்சிப்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 22) என்பவரும் காதலித்து வந்தனர். சம்பவத்தன்று மாணவியை திருமணம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வாலிபர் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் கடத்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோவிந்தராஜை தேடி வருகிறார்கள். கல்லாவி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வந்தார். வீட்டில் இருந்த சிறுமி கடந்த 4-ந் தேதி முதல் காணவில்லை. இது குறித்து அவருடைய பாட்டி கல்லாவி போலீசில் புகார் செய்தார். அதில் ஊத்தங்கரை தாலுகா ரெட்டிப்பட்டியை சேர்ந்த விஜி என்கிற விக்னேஷ் (19) என்பவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தனது பேத்தியை கடத்தி சென்றிருக்கலாம் என கூறியுள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்