பாலத்தில் மோட்டார் சைக்கிள் மோதல் வாலிபர் பலி
விழுப்புரம் அருகே உள்ள பாலத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.;
செஞ்சி,
விழுப்புரம் அருகே கக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் பால கிருஷ்ணன் (வயது 29). இவரும் அதே ஊரைச் சேர்ந்த உதயகுமார் (24) என்பவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் கெடாரில் நடந்த ஒரு காதணி விழாவிற்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அவர்கள் கெடார் அருகே சென்றபோது ,அங்கிருந்த ஓடை பாலத்தில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த பாலகிருஷ்ணன் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். சிறிய காயங்களுடன் உதயகுமார் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இதுகுறித்து புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.