மின்சார ரெயில் சோதனை ஓட்டம்

மின்சார ரெயில் சோதனை ஓட்டம்

Update: 2022-03-06 17:54 GMT
மானாமதுரை, 
மானாமதுரை-விருதுநகர் இடையே மின்சார ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது. இதனை ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் நேரில் ஆய்வு செய்தார்.
ரெயில்வே மின்வழி பாதை 
மானாமதுரை-விருதுநகர் இடையே ரெயில் பாதையை மின்மயமாக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வந்தது. தற்போது இப்பணி முடிவுற்று மானாமதுரை-விருதுநகர் இடையே புதிய மின்மயமாக்கப்பட்ட ரெயில் பாதையில் மின்சார ரெயில் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. இந்த மின்சார ரெயில் சோதனை ஓட்டத்தை தென் சரக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
இதற்கான சிறப்பு ஆய்வு ரெயில் விருதுநகரில் இருந்து நேற்று காலை 8.40 மணியளவில் புறப்பட்டது. 
இந்த ரெயில் மானாமதுரை ெரயில் நிலையத்திற்க்கு நேற்று மதியம் 2.30 மணிக்கு வந்தடைந்தது. பின்னர் மானாமதுரை ெரயில் நிலையத்தில் மின்சார என்ஜின் பொருத்தப்பட்டது. 
சோதனை ஓட்டம் 
இதைத் தொடர்ந்து மின்சார ரெயில் என்ஜினில் மலர்கள், வண்ண, வண்ண பலூன்கள் கட்டப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் என்ஜினுக்கு பூஜை செய்யப்பட்டு பாதுகாப்பு ஆணையர் மின்சார ெரயில் சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்தார். 
இதையடுத்து திருச்சுழி, நரிக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகர் வரை 7 பெட்டிகளுடன் மின்சார ரெயில் இயக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. விரைவில் மானாமதுரை-விருதுநகர் இடையே மின்சார ெரயில் போக்குவரத்து. தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்