தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்
ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-;
மயிலாடுதுறை:
ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தூய்மை பணியாளர்கள் உறுப்பினராக
தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் தமிழக அரசின் தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தில் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் உறுப்பினராக பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த பகுதிக்கு உட்பட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
பெற்றுக்கொண்ட விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து உரிய அலுவலரின் சான்றொப்பத்துடன் சாதிச்சான்று நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நலத்திட்ட உதவிகள்
மேலும் தூய்மை பணியாளர்கள் நலவாரியத்தின் கீழ் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுள்ள உறுப்பினர்களை சார்ந்தவர்களுக்கு புதிய அரசாணையின்படி உயர்த்தப்பட்ட கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, முதியோர் ஓய்வூதியம், மகப்பேறு உதவித் தொகை, இயற்கை மரண உதவித் தொகை மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.
எனவே, தூய்மைப் பணியாளர்கள் நலவாரியத்தில் புதிய உறுப்பினராக பதிவு செய்வதற்கான விண்ணப்பமும், அடையாள அட்டை பெறுவதற்கும், நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கும், நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். அல்லது தொலைபேசி எண்:- 04365-250305 வாயிலாக தொடர்பு கொண்டும் பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.