அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 3 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகன சேவை கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்தார்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 3 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை தர்மபுரி கலெக்டர் திவ்யதர்சினி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2022-03-06 17:41 GMT
தர்மபுரி:
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 3 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை தர்மபுரி கலெக்டர் திவ்யதர்சினி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
108 ஆம்புலன்ஸ் 
தர்மபுரி மாவட்டத்திற்கு 3 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலெக்டர் திவ்யதர்சினி கலந்து கொண்டு ஆம்புலன்ஸ் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது கலெக்டர் கூறியதாவது:- பொதுமக்களின் இன்னுயிரை காக்கும் வகையில் அவசரகால 108 ஆம்புலன்ஸ் வாகன சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1,303 எண்ணிக்கையிலான அவசர கால 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சேவைகள் மேலும் துரிதமாக கிடைக்கும் வகையில், காலதாமதத்தை குறைத்திட புதிதாக 188 அவசரகால 108 ஆம்புலன்ஸ் ஊர்தி வாங்கப்பட்டுள்ளது. இதிலிருந்து 3 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனம் தர்மபுரி மாவட்டத்திற்கு வரப்பெற்றது.
ஒகேனக்கல்
தர்மபுரி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 108 ஆம்புலன்சை ஒகேனக்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகம், கோணங்கிநாய்க்கனஅள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகம், தீர்த்தமலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகம் ஆகிய இடங்களில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் மலர்விழி வள்ளல்,  108 ஆம்புலன்ஸ் வாகன சேவையின் தர்மபுரி மாவட்ட மேலாலர் ராமன்கனி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்