4-வது நாளாக அதிராம்பட்டினம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

புயல் எதிரொலியால் 4-வது நாளாக அதிராம்பட்டினம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன்பிடி தொழில் முடங்கியது.

Update: 2022-03-06 17:34 GMT
அதிராம்பட்டினம்:
புயல் எதிரொலியால் 4-வது நாளாக அதிராம்பட்டினம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன்பிடி தொழில் முடங்கியது. 
4-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை 
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் அறிவித்தது. இதையடுத்து அதிராம்பட்டினத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. மேலும் அவ்வப்போது கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. புயல் எதிரொலி காரணமாக அதிராம்பட்டினம், தம்பிக்கோட்டை, மறவக்காடு, அதிராம்பட்டினம் கரையூர் தெரு, காந்திநகர், ஆறுமுக கிட்டங்கி தெரு, தரகர் தெரு, ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த 4 நாட்களாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. 
மீன்பிடி தொழில் முடங்கியது 
கடலுக்கு செல்லாததால் தங்களது படகுகள் மற்றும் வலைகளை பாதுகாப்பாக துறைமுகத்தில் வைத்துள்ளனர். இதனால் கடந்த 4 நாட்களாக மீன் ஏற்றுமதி மற்றும் உள்ளூர் மார்க்கெட்டுகளுக்கு வரும் மீன்வரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. மேலும் மீன்பிடி தொழில் முடங்கியது. . 
மறு அறிவிப்பு வரும் வரை 
இதுபற்றி ஏரிப்புறக்கரை மீனவர் கூட்டுறவு சங்க துணைத்தலைவர் ராஜா கூறுகையில்,
அதிராம்பட்டினம் பகுதியில் புயல் எதிரொலியால் கடந்த சில நாட்களாக சூறைக்காற்றும், கடல் சீற்றமும் ஏற்பட்டுள்ளது. மேலும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல கூடாது என மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் கடந்த 4 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மறு அறிவிப்பு வரும் வரை நாங்கள் கடலுக்கு செல்ல போவதில்லை என்றார். 
---

மேலும் செய்திகள்